2 வருடங்கள் முடங்கிய விஜய்சேதுபதி படம் திரைக்கு வருகிறது
|விஜய்சேதுபதி நடிப்பில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் உருவானது. இதன் படப்பிடிப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பே நடத்தி முடித்து திரைக்கு கொண்டுவர முயற்சி செய்தனர். படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டனர். ஆனால் சில காரணங்களால் படம் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் இரண்டு வருடங்களாக முடங்கிய இந்த படம் திரைக்கு வர இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக வருகிறார். வெங்கட கிருஷ்ணன் ரோஹத் இயக்கி உள்ளார்.வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரச்சினையை பேசும் படமாக தயாராகி உள்ளது. விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' முதல் பாகம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. மேலும் 4 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.