விஜய் சேதுபதியின் 50-வது பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
|விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' படம் மே 16-ம் தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சமீபத்தில் வெளியானது. அதில். இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி நடிப்பின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மேலும், இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் மே 16-ம் தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.