விஜய் சேதுபதியின் 51-வது படத்தின் தலைப்பு டீசர் வெளியீடு
|விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 51-வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 51 வது படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது 51 வது படத்தையும் இயக்கி முடித்து விட்டார் என்றே தெரிகிறது. ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் தனது 51-வது பட தலைப்பு நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார். 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்துக்கு 'ஏஸ்' எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இதன் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.