< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
20 Dec 2023 7:57 PM IST

'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'அந்தாதூன்' படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், ராதிகா ஆப்தே, அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரீதம் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்