< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடித்துள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
|11 Jan 2024 7:11 AM IST
'மெரி கிறிஸ்துமஸ்' படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் சேதுபதி, தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'அந்தாதூன்' படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், ராதிகா ஆப்தே, அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரீதம் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'காணாத காதல்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை கார்த்திக் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.