< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
10 Sept 2023 10:20 PM IST

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி சலூன் கடை நாற்காலியில் கையில் அரிவாளுடன் உட்கார்ந்திருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் காவலர்கள் நின்றுகொண்டு அவரை பார்த்துக்கொண்டிருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்