< Back
சினிமா செய்திகள்
Vijay Sethupathi reveals physical appearance dont matter to him!
சினிமா செய்திகள்

'பல நடிகர்களிடம் சிக்ஸ் பேக் இருக்கிறது, அதற்காக...'- விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
12 Jun 2024 12:45 PM IST

நடிகர் விஜய் சேதுபதி தனது 50-வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தனது 50-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, விஜய் சேதுபதி இப்படத்தின் புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி ஐதராபாத்தில் படத்தின் புரொமோசன் பணியில் ஈடுபட்ட விஜய் சேதுபதி, புத்திசாலி, அழகு என்பது ஒருவரின் உடல் தோற்றத்தை பொருத்தது கிடையாது என்று கூறினார். அவர் பேசியதாவது,

பல நடிகர்களிடம் சிக்ஸ் பேக் இருக்கிறது, அதற்காக நானும் அந்த மாதிரி இருக்க வேண்டும் என்பது கிடையாது. அது எனக்கு முக்கியமும் இல்லை. புத்திசாலி, அழகு என்பது ஒருவரின் உடல் தோற்றத்தை பொருத்தது கிடையாது. இதனால் நான் அவர்களுக்கு எதிரானவன் என்று நினைத்து விடாதீர்கள். படத்திற்கு தேவைப்பட்டால், இயக்குனர் நேரம் கொடுத்தால் அவ்வாறு மாற தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்

மேலும் செய்திகள்