'நடிகர் என்பதை விட ஒரு நபராக மிகவும்...'- ஷாருக்கானை பாராட்டிய விஜய் சேதுபதி
|ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி, ஷாருக்கானை பாராட்டி பேசியிருந்தார்
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரின் 50-வது திரைப்படமான மகாராஜா நேற்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படத்தில், பாய்ஸ் மணி, நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி, ஷாருக்கானை பாராட்டி பேசியிருந்தார். அவர் பேசியதாவது,
'ஷாருக்கான் சிறப்பாக கதை சொல்வார். அவரது எண்ணம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. அவர் ஒரு நடிகர் என்பதை விட ஒரு நபராக மிகவும் கவர்ச்சிகரமானவர். அது அவரிடம் இருக்கும் அற்புதமான குணம். நான் எல்லோரிடமிருந்தும் ஏதாவது கற்றுக்கொள்கிறேன். ஷாருக்கானிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், அவரது ஆற்றல் ஒருபோதும் குறையாது.
ஒரு நாள், படப்பிடிப்பின்போது, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஆனால் அவர் அதை சொல்லும் வரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்னையும் எனது நடிப்பையும் பற்றிய பல அம்சங்களை தெரிந்து வைத்துள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியடைந்தேன்', இவ்வாறு கூறினார்.
இருவரும் அட்லி இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.