நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள விஜய் சேதுபதி படம்..!
|நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள '19(1)(a)' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதபாத்திரத்தில் நடித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளியான 'மாமனிதன்' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். '19(1)(a)' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.