< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
28 May 2024 4:52 PM GMT

நிதிலன் சாமிநாதன் 'மகாராஜா' படத்தை இயக்குகிறார்.

சென்னை,

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்

இந்த நிலையில், மகாராஜா' படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இது படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி இரு க்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்