< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் புதிய வெப்தொடர்!
|5 Aug 2024 8:15 PM IST
இயக்குநர் மணிகண்டன் இயக்கும் புதிய வெப்தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தது.
நடிகர் விஜய் சேதுபதி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் பாலிவுட்டில் வெளியான 'பார்ஸி' இணையத் தொடரில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்தார். இந்த வெப்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தமிழில் முதன்முறையாக நடிக்கும் வெப்தொடரை 'காக்கா முட்டை', 'கடைசி விவசாயி' புகழ் இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார்.
இந்த வெப் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இந்த வெப் தொடருக்கு முத்து என்கிற காட்டான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.