சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியீடு
|29 Aug 2022 10:25 PM IST
நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சந்தோஷ் பிரதாப் கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அறிமுக இயக்குனர் இயக்கும் 'தி ரோடு' திரைப்படத்தில் நடிகை திரிஷாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அடுத்ததாக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஹாரர் காமெடி படம் ஒன்றில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு 'டியர் டெத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.