< Back
சினிமா செய்திகள்
பருந்தாகுது ஊர்க்குருவி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி..!
சினிமா செய்திகள்

'பருந்தாகுது ஊர்க்குருவி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி..!

தினத்தந்தி
|
20 Jun 2022 8:36 PM IST

அறிமுக இயக்குனர் கோ. தனபாலன் இயக்கியுள்ள 'பருந்தாகுது ஊர்க்குருவி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் கோ. தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ருஷோ-விவேக் பிரசன்னா நடித்துள்ள திரைப்படம் 'பருந்தாகுது ஊர்க்குருவி'. மும்பையைச் சேர்ந்த மாடல் காயத்ரி ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் புகழ் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடாங்கி வடிவேல், இ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிமிக்கி கம்மல் புகழ் ரஞ்சித் உன்னி இசையமைத்துள்ளார். அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.

நிறைய மர்மங்கள் நிறைந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு நபர்கள், ஒருவரையொருவர் எப்படிக் காப்பாற்றுகிறார்கள். அபாயகரமான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன என்ற சர்வைவல் திரில்லர் கதையாக 'பருந்தாகுது ஊர்க்குருவி' படம் உருவாகியுள்ளது. கூடலுார் மண்வயல் கிராமத்திற்கு அருகில் உள்ள காடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்