< Back
சினிமா செய்திகள்
Vijay Sethupathi fought with Vignesh Shivan during Naanum Rowdy Thaan: ‘I told him not to teach me acting’
சினிமா செய்திகள்

'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனிடம் சண்டையிட்ட விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
16 Jun 2024 11:30 AM IST

'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்தார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரின் 50-வது திரைப்படமான மகாராஜா நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படத்தில், பாய்ஸ் மணி, நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பகிர்ந்து இருந்தார். அது குறித்து அவர் பேசியதாவது,

'விக்கி ஸ்கிரிப்டை கூறும்போது, அது அருமையாக இருந்தது. அவர் கூறியபடி நடிக்க முயற்சி செய்தேன். அப்போது விக்கி என்னை வேற மாதிரி நடிக்க சொன்னார். இதனால், விக்கியிடம் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்காதே என்றெல்லாம் சொல்லி சண்டைப் போட்டிருக்கிறேன்.

இந்த கதாபாத்திரத்தை பற்றி நான் தெளிவாக புரிந்துக் கொள்ள நான்கு நாட்கள் ஆனது. அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால் என்னிடம் முன்பே சொன்னார். பாண்டி நல்ல பையன்தான். ஆனால், பிராடு. அவன் அழும்போது எல்லோரும் சிரிக்க வேண்டும்,' இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்