லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தலைவர் 171' படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி ?
|ரஜினிகாந்த் 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமான ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமான ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ரஜினியின் 171-வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர்,விக்ரம்,லியோ உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத்தான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்காலிகமாக 'தலைவர் 171' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ரஜினிகாந்துடன் ஏற்கனவே பேட்ட படத்தில் இணைந்து நடித்துள்ளார். தற்போது புதிய படத்திலும் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுவதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.