எச்.வினோத் டைரக்ஷனில் திகில் படத்தில் நடிக்கிறார், விஜய் சேதுபதி
|விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி முதன்முதலாக நடித்த திகில் படம், 'பீட்சா.' அந்தப் படம் வெற்றிகரமாக ஓடி, அவர் மார்க்கெட் உயரத்துக்கு போக உதவியது. சில வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார்.
'வலிமை' படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் ஒரு புதிய படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இது, அஜித்குமார் நடிக்கும் 61-வது படம். இந்தப் படம் முடிவடைந்ததும் அவர், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன.
இது, ஒரு திகில் படம். அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை துண்டும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை, திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட படமாக இருக்கும்.
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் டைரக்ஷனில், 'விடுதலை' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு இந்தி படமும், ஒரு மலையாள படமும் அவர் கையில் உள்ளன. இந்தப் படங்கள் முடிவடைந்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.