'மகாராஜா' படத்திற்கு விஜய் சேதுபதி சம்பளம் வாங்கவில்லையா?
|'மகாராஜா' திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
சென்னை,
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான படம் மகாராஜா விஜய் சேதுபதியின் 50-வது படமான இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அழுத்தமான கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், 'மஹாராஜா' படத்திற்காக விஜய் சேதுபதி எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, 'மகாராஜா' படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சிவசப்பட்டு நடிகர் விஜய் சேதுபதி உண்மையாகவே அழுததாக கூறியிருந்தார். தற்போது, இவர் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை 2' படத்தில் நடித்து வருகிறார்.