68-வது படத்துக்கு தயாரான விஜய்
|லியோ படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் விஜய் தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
விஜய் தனது 68-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை வெங்கட்பிரபு டைரக்டு செய்கிறார். படத்துக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பூஜை போட படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
68-வது படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது. வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா பெயர் அடிபடுகிறது. படத்துக்கு சி.எஸ்.கே என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள லியோ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதிரடி திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ளது. இதில் நாயகியாக திரிஷா மற்றும் சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.