< Back
சினிமா செய்திகள்
Vijay on the set of

image courtecy:twitter@actorvijay

சினிமா செய்திகள்

'கோட்' படப்பிடிப்பு தளத்தில் விஜய் - புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
25 May 2024 7:20 AM GMT

'கோட்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் அமர்ந்து மானிட்டரைப் பார்க்கும்படி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்