ரசிகர்களை சந்தித்த விஜய்
|நடிகர் விஜய் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுமாறு தனது ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரசிகர்கள் மாவட்டந்தோறும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்கள். நலிந்தோருக்கு இலவச வேட்டி-சேலைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், தையல் எந்திரம் போன்றவற்றை வழங்கியுள்ளனர்.
பல மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்து என்ற உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஏழைகள், கூலித் தொழிலாளர்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கப்படுகின்றன.
விலையில்லா விருந்து திட்டத்தை செயல்படுத்தும் ரசிகர்களை விஜய் சந்தித்து பேசினார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் நல அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் பல விஷயங்கள் குறித்து ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்து விட்டு சென்னை திரும்பி உள்ளனர். அடுத்து சென்னையில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோரும் நடிக்கின்றனர்.