< Back
மாநில செய்திகள்
தொடரும் செல்பி... படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்
மாநில செய்திகள்

தொடரும் செல்பி... படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்

தினத்தந்தி
|
4 Feb 2024 8:53 PM IST

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர். இதனால் புதுச்சேரி - கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஏஎஃப்டி வாயில் முன்பு பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் கூச்சலிட்டனர். பின்னர் அவர் அவர்களுடன் செல்பி எடுத்தார். ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்தனர். அதை அணிந்துகொண்ட விஜய், பின்னர், அதை ரசிகர்களிடமே கொடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.


மேலும் செய்திகள்