"ஆபாச வசனத்துக்கு விஜய் காரணம் இல்லை"- லோகேஷ் கனகராஜ் விளக்கம்...!
|லியோ படத்தின் டிரெய்லரில் விஜய் பேசும் ஆபாச வசனத்துக்கு கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை எற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் விஜய் பேசும் ஆபாச வசனத்துக்கு கண்டனங்கள் கிளம்பி உள்ளன. பெண்களை இழிவுப்படுத்தும் அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சியும் கண்டித்துள்ளது.
இந்த நிலையில் சர்ச்சைக்கு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "அந்த குறிப்பிட்ட வசனத்தை பேசும் நேரத்தில் அதை பேசலாமா? சரியாக இருக்குமா? என்று விஜய் என்னிடம் கேட்டார். நான் அவரிடம் நீங்கள் கண்டிப்பாக அந்த வசனத்தை பேச வேண்டும். கதைக்கு அந்த வசனம் தேவை என்று சொல்லி நான்தான் அவரை பேச வைத்தேன். எனவே அந்த வசனத்துக்காக யாரேனும் வருத்தப்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் என்னுடையதுதான். விஜய் காரணம் இல்லை. கெட்ட வார்த்தை வசனத்தை விஜய் பேசவில்லை. கதாபாத்திரம் பேசியதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்ட வார்த்தை பேசுவதை சரி என்று சொல்லவில்லை. எல்லை மீறிய கோபத்தின் வெளிப்பாடே அந்த வசனம். டிரெய்லரில் கத்தும் சீனுக்கும், அடுத்து வரும் காட்சிக்கும் இடையில் அந்த வார்த்தை தேவையாக இருந்ததால் பயன்படுத்தினேன்'' என்றார்.