< Back
சினிமா செய்திகள்
68-வது படத்தில் இரட்டை வேடங்களில் விஜய்...!  கதாநாயகி  இவர் தான்..!
சினிமா செய்திகள்

68-வது படத்தில் இரட்டை வேடங்களில் விஜய்...! கதாநாயகி இவர் தான்..!

தினத்தந்தி
|
22 Aug 2023 12:59 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் விஜய் 68 உருவாக உள்ளது. லியோ திரைப்படம் வெளியான பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் விஜய் நடித்துள்ளார். திரிஷா நாயகியாக வருகிறார். சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு முதல் தடவையாக விஜய் படத்தை இயக்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் விஜய் 68 உருவாக உள்ளது. லியோ திரைப்படம் வெளியான பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது ஒரு கிராமிய அரசியல் ஆக்ஷன் திரில்லராக இருக்கும். இந்த படத்தில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும் மற்றொரு விஜய்க்கு ஜோதிகாவும் ஜோடியாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

கடைசியாக பிகில் படத்தில் தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் விஜய் நடித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. பிரத்யேக அறிவிப்பு என்னவென்றால், குழு இந்த வாரம் லண்டனுக்கு புறப்பட உள்ளது.

தளபதி 68 திரைப்படம் அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரும்.

மேலும் செய்திகள்