< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய்க்கு நன்றி தெரிவித்த விஷால்
|12 March 2024 9:39 PM IST
நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை வெளியிட்டார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், நேற்று ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் "நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம் உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள். நன்றி நண்பா " என்று பதிவிட்டுள்ளார்.