< Back
சினிமா செய்திகள்
தல, தளபதி...நான் அதை விரும்பவில்லை - விஜய் தேவரகொண்டா
சினிமா செய்திகள்

தல, தளபதி...நான் அதை விரும்பவில்லை - விஜய் தேவரகொண்டா

தினத்தந்தி
|
1 April 2024 8:48 AM IST

நான் விரும்பும் அந்த பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.

சென்னை,

தெலுங்கில் வசூல் சாதனை நிகழ்த்திய அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமான விஜய் தேவரகொண்டாவுக்கு படங்கள் குவிந்து வருகின்றன. தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். சமந்தாவுடன் நடித்துள்ள குஷி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வந்தது. தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி உள்ளது. மேலும் இப்படம் வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவிடம் எதற்காக உங்கள் பெயருக்கு முன்னால் எந்த பெயரையும் வைக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர்,

'நான் விரும்பும் அந்த பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள். தல, தளபதி, தலைவர், சூப்பர் ஸ்டார் என அனைத்தும் பிறருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. கடந்த மூன்று நான்கு படங்களாகவே என் தயாரிப்பாளர்கள் எதையாவது என் பெயர் முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவருகின்றனர், ஆனால் நான் அதை விரும்பவில்லை.

என் பெயர் எனக்கு போதும். என் அம்மாவும் அப்பாவும் எனக்கு வைத்த பெயரால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அது போதும். ஒரே ஒரு விஜய் தேவரகொண்டாதான் அது நான்தான். எனக்கு வேறு எதுவும் பிடிக்கவில்லை. விஜய் தேவரகொண்டா என்று கூப்பிடும்போது வரும் சத்தம் எனக்கு மிகவும் பிடிக்கும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்