'திருமணம் செய்து தந்தையாக வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் உள்ளது' - விஜய் தேவரகொண்டா
|'பேமிலி ஸ்டார்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
சென்னை,
தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி உள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
இதில் படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் தில் ராஜு, வெளியீட்டு உரிமையாளர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டனர். கதாநாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள்தான் 'பேமிலி ஸ்டார்' எனவும், இதை வலியுறுத்தும் வகையில் இப்படம் தயாராகி உள்ளதாகவும், வருகிற 5-ந்தேதி படம் வெளியாவதாகவும் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது,
எனக்கும் திருமணம் செய்து தந்தையாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. மேலும், அந்த பெண் எனது பெற்றோருக்குப் பிடித்திருக்க வேண்டும். என்றார்.
முன்னதாக, பிப்ரவரியில் தனக்கு திருமணம் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அப்போது அவர் கூறியிருந்ததாவது,
எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ அல்லது திருமணமோ நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஊடகங்கள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். விட்டால் என் கையை பிடித்து எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது' என்றார்.