விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படத்தின் அப்டேட்..!
|விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மும்பை,
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் 'லைகர்'. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு 'லைகர்' படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
இந்த நிலையில், லைகர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு டீசர் மற்றும் பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'லைகர்' படத்தின் டீசர் வருகிற 8-ந்தேதி வெளியாகும் என்றும் முதல் பாடல் 11-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.