< Back
சினிமா செய்திகள்
மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?
சினிமா செய்திகள்

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

தினத்தந்தி
|
10 May 2024 6:52 PM IST

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 2019-ல் தெலுங்கில் வெளியான 'ஜெர்ஸி' திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் தனது 12-வது படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவர் இயக்கிய ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டாவின் 13ஆவது படமான பேமலி ஸ்டார் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தினை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். ஷியாம் சிங்கா ராய் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது விஜய் தேவரகொண்டாவின் 14ஆவது படம். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இவர்களது ஜோடி கலக்கியது. இருவரும் காதலிப்பதாக அடிக்கடி இணையத்தில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் அவருக்கு பெயரை பெற்று தந்தது. தமிழில் நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார்.

சமீபத்திய நேர்காணலில் ராஷ்மிகா சரியான கதை அமைந்ததும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். தனது 14-வது படத்தில் ராஷ்மிகா நடித்தால் சரியாக இருக்குமென விஜய் தேவரகொண்டா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்மிகா தற்போது 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்