விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு
|பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் மீண்டும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவின் புதிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார். விஜய் தேவரகொண்டா 13-வது படமான 'பேமலி ஸ்டார்' சமீபத்தில் வெளியானது. இதனை பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் நடிக்கிறார். இதனை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் 59-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முழு விவரம் மே 9-ம் தேதி வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.