< Back
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் குஷி படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
7 Aug 2023 3:57 PM GMT

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'குஷி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'குஷி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நிமிடம் 41 நொடிகள் நீளம் கொண்ட 'குஷி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 9-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்