< Back
சினிமா செய்திகள்
மீரா தங்கம்.. அம்மா இங்கே இருக்கிறேன் - மகள் குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கம்
சினிமா செய்திகள்

'மீரா தங்கம்.. அம்மா இங்கே இருக்கிறேன்' - மகள் குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கம்

தினத்தந்தி
|
12 Dec 2023 6:46 AM IST

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மீரா, தனது மகள் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மீரா, தனது மகள் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'மீரா தங்கம்.. உனது பியானோ உன் விரல்களுக்காக காத்திருக்கிறது. நீ சீக்கிரம் போய்விட்டாய், எங்களால் அதை நம்ப முடியவில்லை. இந்த உலகம் உனக்கானது இல்லைபோல, ஆனால் உன் அம்மா இங்குதான் இருக்கிறேன்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான கருத்தை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன்னை சந்திக்க வரும் வரை நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு' என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவர் அந்த பதிவில், 'ரொம்ப வலிக்குது.. இதிலிருந்து வெளி வர கடவுள் எனக்கு உதவுவார் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த துக்கத்தில் இருந்து வெளியே வர எனக்கு சிறிதுகாலம் ஆகும். நீங்கள் அனைவரும் எனக்காக இருக்கிறீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்