< Back
சினிமா செய்திகள்
24-வது படத்தில் விஜய் ஆண்டனி...!
சினிமா செய்திகள்

24-வது படத்தில் விஜய் ஆண்டனி...!

தினத்தந்தி
|
17 Aug 2023 8:34 AM IST

விஜய் ஆண்டனி ‘ரோமியோ' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகன் ஆன விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இந்த வருடம் தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை ஆகிய படங்கள் வந்தன. மேலும் 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்து 'ரோமியோ' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 24-வது படம். இந்த படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

இதில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். விநாயக் வைத்தியநாதன் டைரக்டு செய்கிறார்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. இந்த படத்தை குட் டெவில் என்ற பட நிறுவனம் மூலம் விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். படத்துக்கு அவரே எடிட்டிங்கும் செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்