< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படம் செப்.28ஆம் தேதி திரைக்கு வருகிறது..!
|3 Sept 2023 1:38 PM IST
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
சென்னை,
விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 'ரத்தம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி தன் டுவிட்டர் பக்கத்தில், "தனஞ்சயன் சார் இப்போ நர்சு கூட நல்லா இருக்காரு...!!
சினிமா நண்பர்கள் யாரும் பயப்படாதிங்க..!! எங்க இயக்குநர் சி.எஸ்.அமுதனும் நர்சு கூடதான் இருக்காரு...!! நானும் போறேன்..!!
செப் 28 நாங்க தியேட்டர்ல ஒன்னா இருப்போம்'' என்று ஒரு கலகல வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.