விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" டீசர் அப்டேட் வெளியீடு
|விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படத்தின் டீசர் அப்டேட் வௌியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அவரது ரோமியோ படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.
"மழை பிடிக்காத மனிதன்" என்று தலையிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டது, ஆனால், படம் வெளியாகவில்லை. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ், ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசை அமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை பார்த்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.