விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!
|நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் 'கொலை'. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குநர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'நைஃப்ஸ் அவுட்' பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் இருவரும் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது 'கொலை' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.