< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி மகள் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல்...!

கோப்புப்படம்

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி மகள் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல்...!

தினத்தந்தி
|
20 Sept 2023 9:50 AM IST

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கொலை என்பது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு. தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை சமூகத்தை எந்தப் புள்ளியில் எதிர்க்கிறது என்பதைக் கண்டறிந்து களைய வேண்டும்.

ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டுக் கொள்வது எத்துணை பெரிய சோகம், வருந்துகிறேன்.

ஒரு குடும்பத்தின் சோகத்தைப் பங்கிட்டு என் தோளிலும் ஏற்றிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்