< Back
சினிமா செய்திகள்
நோட்டாவுக்கு பதில் இவ்வாறு வாக்களியுங்கள் - விஜய் ஆண்டனி
சினிமா செய்திகள்

நோட்டாவுக்கு பதில் இவ்வாறு வாக்களியுங்கள் - விஜய் ஆண்டனி

தினத்தந்தி
|
1 April 2024 1:12 PM IST

நோட்டாவுக்கு பதிலாக மோசமானவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் என்று விஜய் ஆண்டனி கூறினார்.

சென்னை,

தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், விஜய் ஆண்டனி தேர்தலில் வாக்களிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

தேர்தலில் நோட்டாவுக்கு பதிலாக மோசமானவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள். தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் முக்கியமான வேலை. எனவே வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பி அனைவரும் வாக்களியுங்கள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் ஆண்டனி, இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்