போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி - வைரலாகும் போஸ்டர்..!
|விஜய் ஆண்டனி நடித்து வரும் 'வள்ளி மயில்' படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் ஆண்டனி நேற்று முன்தினம் தன்னுடைய 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் 'வள்ளி மயில்' படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டரில் விஜய் ஆண்டனி போலீஸ் கதாபாத்திரத்தில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'வள்ளி மயில்' படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். 'ஜதி ரத்னலு' படத்தின் மூலம் நடித்து பிரபலமான ஃபரியா அப்துல்லா, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
'வள்ளி மயில்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.