< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' படத்தின் டிரைலர் வெளியானது
|25 March 2024 9:24 PM IST
'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பரத் தனசேகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.