விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ஹிட்லர்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
|'ஹிட்லர்' திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து 'ஹிட்லர்' படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். இந்த டிரெய்லர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது, 'ஹிட்லர்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் படத்தின் 4 நிமிட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.