< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
6 April 2023 7:21 AM IST

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் 2016-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. தற்போது பிச்சைக்காரன் 2-ம் பாகம் தயாராகி உள்ளது. இதில் விஜய் ஆண்டனியே கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்துள்ளார்.

மலேசியாவில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது பரபரப்பானது. முகத்தின் தாடை பகுதியில் அறுவை சிகிச்சையும் நடந்தது.

பிச்சைக்காரன்-2 படத்தை இந்த மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீசை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்து உள்ளனர். தொழில்நுட்ப பணிகள் முடியாததால் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இந்த மாதம் விஜய் ஆண்டனி நடித்துள்ள இன்னொரு படமான தமிழரசன் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்