< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'ஜவான்' திரைப்படம் உருவாக காரணமே விஜய் அண்ணன் தான்: அட்லீ நெகிழ்ச்சி
|30 Aug 2023 10:33 PM IST
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லி இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி, "என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். இந்தப் படத்துக்காக அவர் என்னை நிறையவே ஊக்கப்படுத்தினார்.நான் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்த எப்போதும் பாடுபடுவேன்" என்றார். என்று தெரிவித்தார்.