< Back
சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்.ஐ.சி. திரைப்படம் - படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'எல்.ஐ.சி.' திரைப்படம் - படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
15 Dec 2023 12:56 AM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘எல்.ஐ.சி.’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில், 'லவ் டுடே' படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் வீடியோவாக வெளியிட்டு உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த படத்துக்கு 'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்