தமிழ் புத்தாண்டை குழந்தைகளோடு கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி
|தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூவை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் கொண்டாடினார்.
சென்னை,
தமிழ் பட உலகில் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்கிறார். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் 'அன்னபூரணி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் 75- வது படமாகும். மேலும் தமிழில் 'மண்ணாங்கட்டி' மலையாளத்தில் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது.
இந்நிலையில் தமிழ், மற்றும் மலையாள புத்தாண்டு தினத்தை யொட்டி நேற்று நயன்தாரா தனது வீட்டில் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி உள்ளார். நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் அணிந்து இருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.
தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் சேர்ந்து புத்தாண்டை உற்சாக மகிழ்ச்சியுடன்கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.