< Back
சினிமா செய்திகள்
எல்.ஐ.சி. படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'எல்.ஐ.சி.' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
2 April 2024 7:56 AM IST

'எல்.ஐ.சி.' படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

சென்னை,

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது புதிய படத்தை இயக்கி வருகிறார். 'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படம் குறித்தான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டான வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எல்.ஐ.சி நிறுவனம் படத்தின் பெயரை மாற்றக் கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்