< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் விக்னேஷ் சிவனை எச்சரித்த ஷாருக்கான்
சினிமா செய்திகள்

நயன்தாராவிடம் "கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்" விக்னேஷ் சிவனை எச்சரித்த ஷாருக்கான்

தினத்தந்தி
|
13 July 2023 12:30 PM IST

ஜவான் படத்தின் டிரைலரை பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, பதிவு வெளியிட்டிருந்தார்.

சென்னை

அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜவான் படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

ஜவான் படத்தின் மூலம் தனது பாலிவுட் என்ட்ரியை நடிகை நயன்தாரா கொடுத்துள்ளார். இது வெற்றி படமாக அமைந்தால், அவருக்கு அங்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜவான் படத்தின் டிரைலரை பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்த ஷாருக்கான், விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறினார். மேலும், இந்த படத்தில் நடித்ததன் மூலம், சண்டை போடுவதற்கு நயன்தாரா கற்றுக் கொண்டார்.

எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் ஆமாம் சார் மிகவும் கவனமாக இருக்கிறேன். படத்தில் உங்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் காட்சி இருப்பதாக கேள்விப்பட்டேன், அவர் காதல் மன்னனிடம் இருந்து கற்றுக்கொண்டாள், எனவே அத்தகைய கனவில் உங்களுடன் அறிமுகமான மகிழ்ச்சியுடன் இருக்கிறார்

இந்தப்படம் மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டராக இருக்கும் என கூறி உள்ளார்.



மேலும் செய்திகள்