'முதல் காதலனால் நான் ஏமாற்றப்பட்டேன்' - நடிகை வித்யா பாலன்
|முதல் காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை வித்யா பாலன் கூறினார்.
சென்னை,
2005-ம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். 'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், வாழ்க்கையில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வு குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது,
நான் ஏமாற்றப்பட்டேன். என் முதல் காதலன் என்னை ஏமாற்றி விட்டான். நான் கல்லூரி படித்து வந்தபோது ஒருவரை காதலித்தேன். காதலர் தினத்தன்று அவன் என்னிடம் வந்து, முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினான். அப்போதே நான் நொறுங்கிவிட்டேன். அதன் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். வாழ்க்கையில் நான் இப்போது அதைவிட சிறப்பான நிலையில் உள்ளேன்.
பின்னர் வித்யா பாலன், சித்தார்த் ராய் கபூர் என்பவரை திருமணம் செய்தார். முன்னதாக வித்யா பாலன், ஷாஹித் கபூருடன் டேட்டிங் சென்றதாக வதந்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.