< Back
சினிமா செய்திகள்
நடிகை வித்யா பாலன் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள்
சினிமா செய்திகள்

நடிகை வித்யா பாலன் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள்

தினத்தந்தி
|
21 Feb 2024 12:02 PM IST

வித்யா பாலன் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கியுள்ள நபர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெயரில் நபர் ஒருவர் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி பலரிடம் பணம் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வித்யா பாலன் பெயரில் போலி மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம், சினிமா துறையைச் சேர்ந்த நபர்களை அணுகி, சினிமாவில் வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி அந்த நபர் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

வித்யா பாலனின் நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடமும் அந்த நபர் இது போன்று மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து வித்யா பாலனுக்கு தெரிய வந்ததையடுத்து உடனடியாக தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கியுள்ள மோசடி நபர் மீது அவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், அடையாளம் தெரியாத மர்மநபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்