சர்வதேச திரைப்பட விழாவில் 'விடுதலை-1'
|இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பனாஜி,
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவானது உலகளவில் நடத்தப்படும் 14 மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் இந்த விழாவின் 4ம் நாளான இன்று அங்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'விடுதலை பாகம் 1' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.