திரில்லர் படத்தில் விதார்த்
|'லாந்தர்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் விதார்த் நாயகனாகவும், சுவேதா டோரத்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்-நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜி சலீம் டைரக்டு செய்கிறார்.
சாஜி சலீம் இயக்கத்தில் ஏற்கனவே உருவான `விடியும் வரை காத்திரு' பட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. `லாந்தர்' படம் குறித்து அவர் கூறும்போது, ``புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. என் முதல் படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை கொடுத்துள்ளார்'' என்றார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடந்து முடிய இருக்கிறது. ஒளிப்பதிவு: ஞானசவுந்தர், இசை: பிரவீன்.